• Apr 28 2024

சமூக வலைத்தளங்களை வைரலாக்கிய சாரா அலி கானின் கணபதி பூஜை (புகைப்படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முன்னணி வகிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சாரா அலி கான். சினிமாப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இலகுவில் கைகூடி வந்தன. 


இவர் தந்தை சைப் அலிகான் ,தாய் அம்ரிதா ஆகியோர் ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் பிரபல நடிகர்கள் ஆவர். அதுமட்டுமல்லாது 2018 ஹிந்தியில் வெளிவந்த ' கேதார்நாத் ' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி சினிமாவில் கால் பதித்தார்.

அத்துடன் இத்திரைப்படத்தில் இவர் மறைந்த முன்னாள் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாரா அவ்வப்போது சினிமா குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வட இந்தியாவில் சிறப்பாக கணபதி பூஜை கொண்டாடப்பட்டது. வீட்டில் தனது தாயுடன் பூஜையில் ஈடுபட்ட சாரா அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதனைக் காணலாம். 

Advertisement

Advertisement

Advertisement