• Sep 21 2024

அவருக்கு நிகரான கதாப்பாத்திரமாக இருந்தால் நடிப்பேன்- மீண்டும் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்ததை உறுதிப்படுத்திய சந்தானம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் சந்தானம். இவர் விஜய் அஜித் விஷால் ஆர்யா சூர்யா ஆகியோருடன் இணைந்த நடித்ததை அடுத்து தற்பெழுது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் நேற்றைய தினம் இவர் நடிகர் ஆர்யாவின் கேப்டன் திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில் பேசிய நடிகர் சந்தானம், நான் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு இரண்டு ஹீரோ கதைகள் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க பலரும் கேட்டனர்.  ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டு ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறேன்.ஆனால் நடிகர் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும், நான் அவருடன் இணைந்து நடிப்பேன்.


பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அனுமதித்தார் என தெரிவித்தார்.ஆர்யாவின் படமாக இருந்தாலும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அங்கு தன்னுடைய பங்கு இருக்கும் எனவும் சந்தானம் கூறினார்.

மேலும் திரைப்படங்களில் ஏதாவது சின்ன புது விஷயமாவது இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையிலான படமாக கேப்டன் இருக்கும் என சந்தானம் நம்பிக்கை தெரிவித்தார்.


Advertisement

Advertisement