• May 18 2024

சங்கீதாவை உரித்து வைத்தது போல் இருக்கும் அவரின் தங்கை... அழகில் அக்காவையே மிஞ்சி விட்டாரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உடைய தளபதி என்றாலே அது நம்ம விஜய் தான். சிறியோர் முதல் பெரியோர் வரை இவரைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இவரின் மிரட்டலான நடிப்பிற்கும், நகைச்சுவை நிறைந்த பேச்சிற்கும், அசத்தலான நடனத்திற்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அடிமை. 


அந்தவகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் 'வாரிசு' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படமானது தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சந்தோசத்தை தளபதி ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' என்ற படத்தில் நடித்து வருகிறார். 


சினிமாவைத் தாண்டி விஜய்யின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இத்தனை ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவர் குறித்தும் பல விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்புகைப்படமானது எடுக்கப்பட்டு பல காலமானாலும் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சங்கீதாவின் தங்கை அச்சு அசல் அப்படியே சங்கீதா போலவே தோற்றமளிக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement