• Mar 07 2026

அடுத்த மாதம் விருந்து ரெடி...! "கருப்பு" பட அப்டேட் கொடுத்த rj பாலாஜி..

Mathumitha / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் "கருப்பு" இந்த படத்தில் இவர் வக்கீலாக நடித்து வருகின்றார். சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகின்றார். மேலும் பாலாஜியும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றார். இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் அறிமுகமாகவுள்ளார். மேலும் படம் விரைவில் வெளியாகவுள்ளதுடன் பாலாஜியின் பிறந்தநாளன்று படத்தின் தலைப்பு போஸ்ட்டர் வெளியாகி வைரலாகியது.


இந்த நிலையில் தற்போது இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'கருப்பு' படத்தின் TITLE REVEAL போஸ்டருக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி “அடுத்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களுக்கு | மிகப்பெரிய விருந்து தயாராகி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். "ரெட்ரோ " பட வெற்றியின் பின்னர் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement