• May 18 2024

20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீசான பாபா..முதல் நாளில் இத்தனை கோடி வசூலா!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். 


பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இந்நிலையில் ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா, வீரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டாருடன் நான்காவது முறையாக இணைந்த படம் தான் பாபா. 


இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் கவுண்டமனி, விஜயகுமார், ஷாயாஜி ஷிண்டே, ரீனா பரத்வாஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.


கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வெற்றியடையவில்லை.


ரஜினிகாந்த் மீண்டும் பாபா படத்தின் கடந்த 10ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தார். ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளது பாபா.

Advertisement

Advertisement