• Jan 19 2025

10 வருடத்திற்கு முன் பார்த்த அதே இடுப்பு.. ரம்யா பாண்டியன் இன்ஸ்டா போஸ்டுக்கு குவியும் கமெண்ட்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பழகை வெளிப்படுத்தும் வகையில் ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை எடுத்திருந்தார் என்பதும் அது தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் பலர் அறிந்து இருப்பார்கள்.

இந்த நிலையில் 10 வருடம் கழித்து மீண்டும் இடுப்பழகை வெளிப்படுத்தும் வீடியோவை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அதில் ’பத்து வருடத்திற்கு முன் பார்த்த அதே இடுப்பு’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள்தான் அதிகம் பதிவாகி வருகிறது.

’ஆண் தேவதை’ உட்பட சில படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ மற்றும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பிறகும் அவர் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் சுற்றுலா சென்ற வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ரம்யா பாண்டியன் இடுப்பழகை வெளிப்படுத்தும் வகையில் கிளாமர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில நிமிடங்களில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 10 வருடங்களுக்கு முன் வெளியான இடுப்பழகு போட்டோஷூட்டிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ரம்யா பாண்டியன் அப்படியே உடம்பை மெயின்டன் செய்து வைத்திருக்கிறார் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement