• Sep 08 2024

கணவருடன் ஒரு ஜாலி ட்ரிப் போன ரகுல் ப்ரீத் சிங்.. பிகினியும் உண்டு.. ரொமான்ஸும் உண்டு..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவருடன் வெளிநாட்டிற்கு ஒரு ஜாலி ட்ரிப் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதில் பிகினியும், ரொமான்ஸும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல்  ப்ரீத்தி சிங் கடந்த பிப்ரவரி மாதம் பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடந்த இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் ரகுல்  ப்ரீத்தி சிங்  நடித்த ’இந்தியன் 2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் ரகுல்   ப்ரீத்   சிங் அவ்வப்போது கணவருடன் ஜாலியாக வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் பிஜி தீவுக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் நீச்சல் குளத்தில் பிகினியுடன் இருப்பது, கணவருடன் ரொமான்ஸ் ஆக நெருக்கமாக இருப்பது உள்ளிட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement