• May 18 2024

ஜெயிலர் முதல் காட்சியில் ரஜினியின் மனைவி, மகள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று படம் வெளியாகி தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி முடிவடைந்து தற்போது படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாக்களின்பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு ’பாட்ஷா’ போன்ற ஒரு மாஸ் படம் உருவாகி இருப்பதாகவும் இதற்கு நெல்சன் தான் காரணம் என  படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினிகாந்த் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் திரையரங்குக்கு வந்திருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .



Advertisement

Advertisement