• Oct 08 2024

முத்துவேல் பாண்டியனாக ரஜினி கலக்கினாரா...? கவிழ்த்தாரா..? 'ஜெயிலர்' பட முழு விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இன்றைய தினம் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. 


அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தினுடைய முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கு? என்பது குறித்த தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "ரஜினி படம்னா இப்படிதான் சூப்பராக இருக்கணும். இரண்டாம் பாதியில் ரஜினியின் பர்பார்மன்ஸ் அல்டிமேட் ஆக இருந்தது, இதுவரை நெல்சன் எடுத்த படங்களில் இதுதான் மிகச் சிறந்த படம், அத்தோடு அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நிச்சயம் ஜெயிலர் பிளாக்பஸ்டர் ஹிட் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இன்னொரு நெட்டிசன் தனது பதிவில் "ஜெயிலர் முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி பிளாக்பஸ்டர். மொத்தத்தில் இது ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம். அதேபோன்று அனிருத் பிஜிஎம் வேறலெவலில் இருக்கின்றது, அதாவது அவரின் ஹுகூம் பாடல் சூப்பராக இருக்கிறது, ஜெயிலர் நிச்சயமாக பிரம்மாண்ட வசூலை வாரிக் குவிக்கும்" எனக் கூறியுள்ளார்.


மேலும் ஒருவர் கூறுகையில் "நான் துபாயில் ஜெயிலர் படம் பார்த்தேன். இது ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. ரஜினியின் முந்தைய பட சாதனைகளை இது நிச்சயமாக முறியடிக்கும் என நினைக்கிறேன். ஜெயிலர் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என வாழ்த்துக்களுடன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


மற்றோருவர் தனது பதிவில் "இப்படி ஒரு படத்தை எடுக்க கட்டாயம் நெல்சனால மட்டும்தான் முடியும். இனி நம்பர் ஒன் சூப்பர் ஒன் எல்லாமே நம்ம நெல்சன்தான். ரஜினிக்குப் பல வருசம் கழிச்சு ஒரு தரமான பிளாக்பஸ்டர். ஓபனிங் முன்ன பின்ன இருந்தாலும் இன்டர்வல் ப்ளாக் பைட்டுக்கு அப்றம் பாட்ஷாவையே தூக்கிட்டாரு, அந்த பஞ்ச் வேறலெவலில் இருக்கின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


வேறொரு நெட்டிசன் "ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாதியை பார்க்கும் போது யூகிக்கக்கூடிய காட்சிகளுடன் கிட்டத்தட்ட பேட்ட படம் போல் உள்ளது. படத்தை தாங்க ரஜினி முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்த முயற்சி போதுமானதாக இல்லை. சில காட்சிகள் சொதப்பலாக உள்ளன" எனக் கூறியுள்ளார்.


வேறொரு ரசிகர் கூறுகையில் "பீஸ்ட் படத்தில் தான் எடுக்க நினைத்ததை எடுக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் தயங்கி தயங்கி சொல்லிருப்பார் நெல்சன். ஜெய்லரின் வெற்றி அதை உண்மையாக்கியிருக்கிறது" என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.


அத்தோடு வேறொரு நபர் "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், காமெடி காட்சிகள், கேமியோக்கள், இசை மற்றும் பிஜிஎம், திரைக்கதை ஆகியவை படத்திற்கு பாசிடிவ் ஆக அமைந்துள்ளன. முதல் பாதி சற்று மெதுவாக நகர்வது மட்டுமே நெகடிவ் ஆக உள்ளது மொத்தத்தில் ரஜினிக்கு சிறந்த படமாக ஜெயிலர் அமைந்துள்ளது" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.


மேலுமொரு ரஜினி ரசிகர் "ஜெயிலர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மிகச்சிறந்த கிளைமாக்ஸ், அக்காட்சியை பார்த்தபோது புல்லரித்தது. ரசிகர்களின் இதயத்துடிப்பை அறிந்து வைத்துள்ளார் ரஜினி. நெல்சன் தேர்ந்தெடுத்த கதைக்களம் வேறலெவல்" என ரொம்ப ஹாப்பியாக பதிவிட்டுள்ளார்.


இவ்வாறாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படமானது பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக் குவித்து வருகின்றது. ஆகவே படம் சூப்பர் ஹிட் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Advertisement