நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி நேற்று உலகமெங்கும் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.46 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக கலவையான மதிப்பீடுகளை பெற்றாலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்படத்தில் நாசர் மகளாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ரஹ்மானின் மகள் என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மணி ரத்னத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

அதேபோல் ‘லப்பர் பந்து’ பட புகழ் நடிகை சஞ்சனா இப்படத்தில் துணை இயக்குநராகவும் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட லப்பர் பந்து ஹீரோயின் சஞ்சனாவும் உதவி இயக்குநராக பணியாற்றி நடித்துள்ளார். மேலும் நடிகை குஷ்பூவின் மகளும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Listen News!