• May 08 2024

காற்றோடு கலந்த குயிலிசை.. புகழின் உச்சியில் இருந்தும் கொடிய நோயால் போராடிய அவலம்? யார் இந்த பவதாரணி?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் இளைய மகளாகிய பவதாரணி அவர்கள் தற்போது காலமாகி இருக்கிறார்கள் . இவருடைய இந்த இறப்பு செய்தி இசை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த செய்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவருடைய வாழ்க்கை வரலாறு என்ன? இவங்க என்ன எல்லாம் சாதித்தார் என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

ராஜபவதாரணி 1976 ஜூலை 23 பிறந்து இருக்கிறார் . இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர் . கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா . இசை குடும்பத்தில் பிறந்ததால் என்னவோ இவருக்கு இசை யாருமே கற்றுக்கொடுக்காமலே வந்து விட்டது என்றே சொல்லலாம் . 


1975ல் பிரபுதேவா நடிப்பில் வெளியான ராசையா படத்தில் முதல் முறையாக மஸ்தான மஸ்தான பாடல் பாடி  இருக்கிறார் . மலையாளத்தில் மை டியர் குட்டி சாத்தான் படத்திலயும் ஒரு முக்கியமான ரோல் பண்ணி இருந்தாங்க . குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகமானவர் . 

தமிழ் திரைப்படமான பொம்மை குட்டி அம்மாவுக்கு என்ற படத்தில் "குயிலே குயிலே " என்ற பாடலையும் சிறு வயதிலேயே பாடி இருக்கிறார் . இந்த பாடல் இளையராஜா இசையில தான் அமைந்து இருக்கிறது . இதனை தொடர்ந்து சந்திரலேகா ,கட்டபஞ்சாயத்து , மற்றும் இரட்டை ரோஜா , மாணிக்கம் என இது போல பல படங்களுக்கு பாடல்கள் பாடி இருக்கிறார் . 


அதையும் தொடர்ந்து மயில் போல பொண்ணு என்ற பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றார் . காதலுக்கு மரியாதை படத்தில் மிகவும் பிரபலமான பாடலான " என்னை தாலாட்ட வருவாளோ " என்ற பாடலையும் பாடி இருக்கிறார் .  

தமிழ் திரைப்படங்களில் ரொம்பவே ஹிட் பாடலான " M . குமரன் திரைப்படத்தில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயோ பாடல் மற்றும் தாமரை பரணி திரை படத்தில் ரொம்பவே ஹிட் ஆன " தாலியே தேவையில்லை நீதான் என் போன்" என்ற பாடலையும் இவர் தான் பாடியுள்ளார் . இப்ப வரைக்கும் நிறைய பெயருடைய விருப்பமான பாடல் . 


இசை மூலமாக நடிப்பதற்கும் வந்தவர் . எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஒரு நோர்மலான பெண்ணாக வாழ்ந்து முடித்தார் . இவருடைய திருமண வாழ்க்கையை பார்த்தால் இவங்க காதலித்து தான் திருமணம் பண்ணினார் . பிரபல பத்திரிகையாளரான ராமச்சந்திரன் இவருடைய மகனை தான் இவர் காதலித்தார் . இவர்களுடைய காதல் வீட்டுக்கு தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் ஓகே சொல்லி திருமணம் பண்ணி வைத்தார்கள் . 


என்ன தான் கோலாகலமாக திருமணம் நடந்தாலும் இரண்டு பெயருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் குழந்தை இல்லாத காரணத்தினால் பிரிவும் வந்தது . இப்பிடி எல்லாம் பல பத்திரிகைகள் சொன்னாலும் இவருடைய இறப்பின் போது கணவர் சபரி இருந்து இருக்கிறார் . 

கல் ஈரல் புற்று நோய் இவங்களுக்கு இருந்து இருக்கிறது ஐந்து மாதங்களுக்கு பிறகு தான் இவருக்கு தெரிய வந்து இருக்கு. அந்த நோயின் கொடூரத்தினாலேயே அவங்க இன்று மறைந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement