• Jan 18 2025

நடிகர் விக்ரமுக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகழாரம் , "தங்கலான்" ரெடி !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவில் பெரும் ஏதிரிபார்ப்பிற்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்களான விக்ரமின் "தங்கலான்" மற்றும் சூர்யாவின் "கங்குவா" திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் திரு .ஞானவேல்ராஜாவின் சமீபத்தைய இன்டெர்வியூ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


அண்மையில் வெளியான ஞானவேல்ராஜாவின் நேர்காணல் காணொளியொன்றில் விக்ரமை புகழும் ஞானவேல்ராஜா அவரை போல் இந்த அளவு அர்ப்பணிப்பு மிக்க நடிகரை காணமுடியாது என்றும் "தங்கலான்" படத்திற்கான செலவு ஆரம்பகட்ட தொகையின் ஒன்றரை மடங்காக அதிகமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் "தங்கலான்" பெஸ்ட் காப்பியை தான் பார்வையிட்டதாகவும் வருகிற ஆகஸ்ட் மாதமளவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதை அறிந்த ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவது போல் உற்சாகமடைந்துள்ளனர். 

Advertisement

Advertisement