• May 18 2024

அசானிக்காக நடுவர்களிடம் கெஞ்சிய கவிஞர் சினேகன்- saregamapa ஷோவில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்- வைரலாகும் வீடியோ

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியில் ஜுனியர்களுக்கான மூன்றாவது சீசன் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.ரேடியோவில் பாடலைக் கேட்டு பாட ஆரம்பித்த இவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் சரிகமப நிகழ்ச்சி.


அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் டெடிகேஷன் டவுண்ட் நடந்தது. அப்போது போட்டியாளர்கள் தாம் யாருக்காக அந்த பாடலை டெடிக்கேட் பண்ண விரும்புகின்றார்களோ, அவர்களுக்காக பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சினேகர் ஸ்பெஷல் கெஸ்டாக கலந்து கொண்டார். அப்போது அசானி ஒவ்வொரு பூக்களுமே என்னும் பாடலைப் பாடி இருந்தார்.

பாடல் பாடும் போது இடையில் பல முறை பாடல் பாடுவதை விட்டு விட்டுப் பாடினார். இருந்தாலும் அங்கு இருந்தவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் பாடலை சிறப்பாக பாடி முடித்தார். அவர் பாடி முடித்தவுடனேயே,சினேகன் வெற்றியும் நிச்சயம் இல்லை, தோல்வியும் சிச்சயம் இல்லை, நம்பிக்கை மட்டுமே உறுதி. உண்மையிலேயே இந்த மேடைல இவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்ததற்கு ஷு தமிழுக்கு நன்றி.

எனக்காக எங்களை நம்பி வந்திருக்கும் என் தங்கைக்கு கோல்டன் மழை கொடுங்க என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். இதனால் நடுவர்களும் அசானியின் பாடலை கோல்டன் பொர்போமன்சாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement