• Sep 30 2023

பசுபதியை போலீசில் மாட்டிவிட்ட காவேரி... தப்பிக்க முயலும் பசுபதி... உண்மை வெளிச்சத்துக்கு வருமா..? 'Mahanadhi' Promo.!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. தந்தையை இழந்து வாழும் நான்கு பெண் பிள்ளைகள் தமது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது தனது தந்தையை ஏமாற்றி பசுபதி தோட்ட நிலத்தை ஏமாற்றி தன்னுடைய பெயரில் ரெஜிஸ்டர் பண்ணிய விடயம் காவேரிக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


அதில் பசுபதி ஏமாற்றியதை நிரூபிக்க காவேரி முயற்சி செய்கின்றார். குறித்த இடத்திற்கு வந்த பசுபதியைப் பார்த்து போலீசார் "காவேரி உங்க மேல கம்ளைண் கொடுத்திருக்காங்க" எனக் கூறுகின்றனர்.


பதிலுக்கு காவேரியைப் பார்த்த பசுபதி "ஆதாரம் இருக்கா" எனக் கேட்கின்றார். அதற்கு காவேரி "எங்க அப்பா செத்ததற்கு நீ தான் காரணம் என்று வெள்ளைச்சாமி வந்து சொல்லுவார்" என்கிறார். பதிலுக்கு பசுபதி வெள்ளைச்சாமியையும் காணோம், கறுப்பு சாமியையும் காணோம் என்கின்றார். 


அதற்கு காவேரி "எங்க அப்பாவோட போனில் ஆதாரம் இருக்கு" எனக் கூறிப் போனை எடுக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. எனவே தந்தையை பசுபதி ஏமாற்றியதை நிரூபிக்க காவேரி எடுத்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement