• Dec 05 2023

தூண்டில் போட்டு பிடித்த தங்கமீன் தான் ஷாலினி! இப்படியொரு சுவாரஸ்ய பின்னணியா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான் ஷாலினி. இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம் எனப் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதோடு தற்பொழுது சினிமாவிலிருந்து விலகி விட்டார்.


இந்நிலையில், அமர்க்களம் படத்தில் ஷாலினி நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சரண் 'அமக்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். எனவே, இந்த படத்தில் அவர் அறிமுகமாகும் போது ஒரு பாடல் காட்சி இருக்கிறது எனவும், அதை நீங்களே பாடுங்கள்' என்று சொல்லிவிட்டேன்.

அப்படித்தான் பரத்வாஜ் இசையில் 'தரார ரார தாரார ரார' என்கிற பாடலை அப்படத்தில் ஷாலினி பாடினார். அப்படம் உருவான போதே ஷாலினியை அஜித் காதலித்தது எனக்கு தெரியும். உங்கள் அறிமுக பாடலை நீங்களே பாடலாம் என தூண்டில் போட்டு பிடித்த அந்த தங்க மீன் இப்போது ஏகேவின் வைரத் தொட்டியில்' என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement