• Mar 25 2023

ப்பா, ராஜா ராணி புதிய சந்தியாவா இது ?- மாடர்ன் உடையில் சும்மா கலக்குகின்றாரே-குவியும் லைக்குகள்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் அவர் வெளியேறினார்.

இதையடுத்து சந்தியாவாக ரியா விஸ்வநாத் நடிக்க தொடங்கினார்‌. இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் தற்போது அவரும் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார்.மேலும் ரியா சீரியலில் இருந்து விலக முதல் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 

 ‘ராஜா ராணி தொடரில்  நடிக்க ஆரம்பித்து ஒரு ‘வருடம் ஆகப் போகிறது ஆனால்  நான் எந்த ஒரு வீடியோவும் போடவில்லை .


 இப்போது போடுகிறேன் ஏனென்றால் நான் இனி ராஜா ராணி 2 தொடரில் இல்லை இனி நான் சந்தியா இல்லை சந்தியாவாக வேறு ஒருவர் பண்ணப் போகிறார் அவருக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்’ என்று கூறியுள்ளார்.ரியா விலகியதால் அடுத்து யார் சந்தியாவாக நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 தற்போது ஆல்யா இனியா தொடரில் நடித்து வருவதால் ஆல்யா மானஸாவே மீண்டும் சந்தியாவாக நடிக்க வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஏற்கனவே இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர், எப்போ நீங்க ராஜா ராணியில் வருவீர்கள், உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என்று கூறி இருந்தார்.


இதற்கு பதில் அளித்த ஆல்யா, நான் ராஜா ராணியில் மீண்டும் வரப்போவது இல்லை. சந்தியா கதாபத்திரம் இனி நிரந்திரமாக புதிய நாயகி தான் நடிப்பார் என்றும் கூறி இருந்தார்.


 இப்படி ஒரு நிலையில் புதிய சந்தியாவாக ஷு தமிழில் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்து பிரபலமான ஆஷா கௌடா நடித்து வருகிறார்.இவருடைய மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவான கவனத்தை ஈர்த்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement