• Mar 25 2023

லவ் டுடே படத்தில் பெண்களை மட்டம் தட்டி விட்டார் பிரதீப்.. ஒரு நாள் நிச்சயம் வருந்துவார்.. பிரபல நடிகர் ஆதங்கம்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

2022ம் ஆண்டு அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக லவ் டுடே திரைப்படம் இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா மற்றும் பல யூடியூப் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இப்படத்திற்கு திரையரங்கில் அமோக வரவேற்பு இருந்தது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூலை வாரிக்குவித்தது. லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் அர்ச்சனா கல்பாத்தி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், தனது இரண்டாவது முயற்சியிலே இமாலய வெற்றி பெற்றதால், மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறார். மேலும் லவ் டுடேயின் மாபெரும் வெற்றியின் காரணமாக தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் கோலிவுட்டில் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார், லவ் டுடே படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படத்தை உருவாக்கியதற்காக பிரதீப் வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார். 

 பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் பெண்களை மட்டம் தட்டி சிரிக்க வைத்துள்ளார். இது ஒரு சமமான கதை இல்லை, இது ஒரு ஆண் முன்னோக்கு கதை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் ஒரு படம் எடுத்துவிட்டோமே என நிச்சயம் வருத்தப்படுவார் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். அலைபாயுதே, கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement