• Sep 13 2024

சிக்கலில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'... இப்படியா கேன்சர் நோயாளர்களை காயப்படுத்துவீங்க... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் அழகாக நகர்கின்றது. 

டி.ஆர்.பி ரேட்டிங்கில் கூட உச்சத்தில் இருந்து வந்த இந்த சீரியல் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும் வகையில் தற்போது சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக தனத்துக்கு கேன்சர் என்றும் அதற்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. 


மேலும் தனத்திற்கு கேன்சர் என்ற உண்மை மீனா மற்றும் முல்லையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதனையடுத்து தனம் கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிறந்த பிறகே கேன்சர் ட்ரீட்மென்ட் செய்ய முடியும் என டாக்டர் சொன்னதால், பின்னர் வலி வந்த மாதிரி தனத்தை நடிக்க வைத்து சிசேரியன் செய்து பிரசவத்தை முடித்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆபரேஷன் செய்த மூணாவது நாளே தனம் வீட்டுக்கு வந்து வழக்கம் போல நடமாடித் திரிவார். அத்தோடு கேன்சர் ஆபரேஷனையும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக நடத்தி விடுவார்கள்.


இவ்வாறாக எந்த ஒரு யதார்த்தமும் இல்லாமல் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருப்பதால் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அதாவது முல்லைக்கு பிரசவமான போது மட்டும் ஒரு மாதமாக முல்லை ஹாஸ்ப்பிட்டலில் இருப்பது போல ஓட்டினார்கள். ஆனால் மூத்த மருமகள் தனம் மட்டும் குடும்பத்துக்கு செலவு வைக்க கூடாது என மூன்றே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்து விடுவாராம். இது எல்லாம் நம்பக் கூடிய மாதிரியா இருக்கு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது கேன்சர் ஆபரேஷன் முடிந்த ஒரு பேஷண்ட் இப்படி தான் லிப்ஸ்டிக், ஐ ஷாடோ எல்லாம் போட்டுட்டு இருப்பாங்களா? தனத்தை பார்க்கும் போது டிரீட்மென்ட்டுக்கு வந்த மாதிரியே இல்ல ஏதோ பங்ஷனுக்கு வந்த மாதிரி இருக்கு. இதுல போராடி கேன்சரை ஜெயிச்சு இருக்காங்கன்னு கதை வேற விடுறீங்களே, இது உண்மையாகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்துவது போல இருக்கிறது" எனக் கூறி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுமத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர். 

மேலும் ஆபரேஷன் முடிந்தவரை மேக்கப்புடன் காண்பிப்பது ரொம்ப தப்பு எனவும் கூறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement