• Jan 18 2025

ஹனிமூன் போக சீன் போடும் தங்கமயில்.. என்ன செய்ய போகிறார் சரவணன்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'  சீரியல் ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மொட்டை மாடியில் சரவணன், செந்தில், கதிர் மற்றும் பழனி மாமா ஆகிய நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கமயில் அங்கே வருகிறார். அப்போது சரவணன் ‘நீ போய் படுத்து தூங்கு, நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்’ என்று கூறுகிறார்.

தங்கமயில் காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் தூங்கி விட , காலையில் தான் சரவணன் வருகிறார். அப்போது தங்கமயில் தூங்குவது போல் நடிக்க, இன்னும் என்ன எழுந்திருக்காமல் இருக்கிறார் என்று கேட்டுவிட்டு, அதன் பின் கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார். இதனை அடுத்து மதியம் சாப்பாடும் சரவணனுக்கு தங்கமயில் கொண்டு செல்லவில்லை.

இரவு மீண்டும் வீட்டுக்கு வரும்போதும் தங்கமயில் தூங்கிக் கொண்டிருக்கிறார், அப்போது அவர் என்னவென்று கேட்க, உடனே எழுந்து நீலி கண்ணீர் வடிக்கும் தங்கமயில், ’என் மீது உங்களுக்கு பாசமே இல்லை’ என்று கூற, ’நான் என்ன செய்தால் உன் மேல் நான் பாசம் வைத்திருக்கிறேன் என்று புரிந்து கொள்வாய்’ என்று கேட்கிறார்.

அப்போது ’நான் தான் ஹனிமூன் போக வேண்டும் என்று சொன்னேனே, என்னை கூட்டிட்டுப் போங்கள், அப்போதுதான் நீங்கள் என் மேல் பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நம்புவேன்’ என்று கூற, சரவணன் அதிர்ச்சி அடைவதுடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

இந்த வீடியோவின் கமெண்ட்டுகளாக ’தங்கமயில் ஆட்டம் அலப்பறை எல்லை மீறியதாக உள்ளது’ என்றும் ’தங்கமயில் பார்க்க தான் அப்பாவி, ஆனால் பயங்கரமான ஆள்’ என்றும் ’ஹனிமூன் போயே ஆக வேண்டும், அவ்வளவு வெறி தங்கமயிலுக்கு’ என்றும் ’இந்த பித்தளை மயிலை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது’ என்றும் பலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்

Advertisement

Advertisement