• Jul 13 2025

தங்கமயிலிடம் உளறிய கோமதி.. மீனா, ராஜி அதிர்ச்சி.. மீண்டும் கோபமடைந்த பாண்டியன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் டியூஷன் விஷயத்துக்காக வெளியே கிளம்பும் நிலையில் கோமதி இடம் கோவிலுக்கு செல்வதாக கூறுகின்றனர். அப்போது தங்கமயில் இடம் ’நீயும் கோவிலுக்கு சென்று வா’ என்று கோமதி  கூற அவரும் உடனே ’டிரஸ் மாற்றிக் கொண்டு வருகிறேன்’ என்று கூறுகிறார்.

ஆனால் மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் ’நீங்கள் வரவேண்டாம், வெயிலில் கருத்து விடுவீர்கள், உங்களை நம்பி தான் இந்த வீட்டை ஒப்படைத்து இருக்கிறோம், நீங்கள் இல்லாமல் போனால் வீடு என்ன ஆவது’ என்று கூறி சமாளிக்க ’என்னை விட்டுப் போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள்’ என்று தங்கமயில் புலம்புகிறார்.

இதனை அடுத்து ராஜி மற்றும் மீனா தாங்கள் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு மீனாவுடன் வேலை பார்க்கும் பெண்ணை சந்தித்து டியூஷன் எடுக்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் வீடு திரும்புகின்றனர். இந்த விஷயத்தை கோமதி இடம் சொல்லி அவர் மூலம் மாமாவிடம் சொல்ல வேண்டும் என்று மீனா, ராஜி ஆகிய இருவரும் முடிவு செய்து கோமதியிடம் விஷயத்தை சொல்கின்றனர். இதைக் கேட்டு கோமதி அதிர்ச்சி அடைகிறார்.



ஏற்கனவே டியூஷன் விஷயத்தால் மாமா ரொம்ப கோபத்தில் இருக்கிறார், இதை சொன்னால் இன்னும் கோபப்படுவார்’ என்று கோமதி சொல்ல, நீங்கள் தான் எப்படியாவது பக்குவமாக எடுத்துச் சொல்லி உதவி செய்ய வேண்டும் என்று மீனா மற்றும் ராஜி கெஞ்சுகின்றனர். அப்போது அங்கு வரும் தங்கமயில் ’என்ன உதவி வேண்டும்’ என்று கேட்க   மீனா மற்றும் ராஜி வேறு எதையோ கூறி சமாளிக்க, ‘என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள், நான் வந்தால் பேச்சை நிறுத்தி விடுகிறீர்கள், என்னை மூன்றாம் நபர் போல் பார்க்கிறீர்கள்’ என்று தங்கமயில் புலம்ப ஆரம்பித்தவுடன் கோமதி வேறு வழியின்றி டியூஷன் விஷயத்தை உளறி விடுகிறார்.

டியூஷன் விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கமயில், ’ஏற்கனவே ஒரு முறை மாமா வேண்டாம் என்று சொல்லியும் மீண்டும் அதையே செய்கிறீர்களே, இது தப்பில்லையா? என்று சொல்ல, மாமாவிடம் சொல்லிவிட்டு தான் சொல்ல செய்யப் போகிறோம், மாமாவிடம் அத்தை சொல்லி அனுமதி வாங்கி தருவார் கூறியதோடு அதற்கு முன் நீங்கள் மாமாவிடம் உளறி வைக்க வேண்டாம் என்று தங்கமயிலிடம் மீனா கூறுகிறார். அதன்பின் கோமதியை மீனா திட்டுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

நாளைய எபிசோடில் மொட்டை மாடியில் எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாண்டியன் அதை பார்த்து முறைக்கும் காட்சி உள்ளன.

Advertisement

Advertisement