• Jan 19 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மயில் இல்லாமல் சரவணன் இல்லை.. பெண் பார்க்க போன இடத்தில் உளறல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது சரவணனுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வருகிறது. சுயம்வரம் மூலம் தங்கமயில் என்ற பெண்ணை சரவணனுக்கு பார்த்த நிலையில் தற்போது அவருடைய வீட்டுக்கு சென்று பாண்டியன் குடும்பத்தினர் பெண் பார்க்கின்றனர். 

பெண்ணின் வீட்டார் பொய், புரட்டு மற்றும் புழுகுகளை மட்டுமே கூறிவரும் நிலையில் அப்பாவியாக இருக்கும் பாண்டியன் குடும்பத்தினர் அதை உண்மை என நம்பி வருகின்றனர். வீடு பழையதாக இருக்கிறது என்று கேட்டபோது, பக்கத்து தெருவில் நிலம் வாங்கி போட்டிருக்கிறோம், விரைவில் பெரிய வீடு கட்டுவோம் என்று பில்டப் கொடுக்கின்றனர்.



பெண்ணின் குடும்பத்தினர் சொல்லும் ஒவ்வொரு பொய்யையும் அப்பாவித்தனமாக பாண்டியன் குடும்பத்தினர் நம்பி வரும் நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் தனியாக பேசட்டும் என்று முடிவு செய்து ஒரு அறைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு ’என்ன படம் பிடிக்கும்? என்ன பிரியாணி பிடிக்கும்? என்று அப்பாவித்தனமாக சரவணன் பேச தன் பெற்றோர்கள் சொன்ன பொய் காரணமாக தர்ம சங்கடத்தில் இருக்கும் தங்கமயில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார். அப்போது சரவணன், ‘என் பெயர் சரவணன், உங்க பேர் தங்கமயில், மயில் இல்லாமல் சரவணனை பார்க்க முடியாது’ என்று உளற தங்கமயில் நெளிகிறார்.

ஒரு வழியாக இருவரும் தனியாக பேசிவிட்டு வெளியே வர இருவரிடமும் பிடித்திருக்கிறதா என்று கேட்கப்படுகிறது. சரவணன் யோசிக்காமல் தங்கமயிலை தனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல, நீண்ட யோசனைக்கு பிறகு தங்கமயிலும் பிடித்திருக்கிறது என்று கூறினார். இதனை அடுத்து பாண்டியன், கோமதி உள்பட அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைய தனது பெண்ணுக்கு ஒரு ஆடு சிக்கிவிட்டது என்று தங்கமயில் பெற்றோரும் சந்தோஷமாகி உள்ளனர்.

இந்த நிலையில்  தங்கமயில் குடும்பத்தினரின் உண்மை சொரூபம், திருமணத்திற்கு முன்பே பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வருமா? அல்லது திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வருமா? என்பதை அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement