• May 14 2024

‘ஒன்னோட நடந்தா கல்லான காடு ’-தனுஷின் குரலில் வெளியான விடுதலை பட பர்ஸ்ட் சிங்கிள் பாடல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரியும் விஜய் சேதுபதியும் நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை.இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

 இன்று விடுதலை படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஒன்னோட நடந்தா’ என்கிற இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் தனுஷ் தான் பாடி இருக்கிறார்.

இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இதுவாகும். இதற்காக இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி எடுத்து இப்பாடலை பாடி உள்ளார் தனுஷ். தற்போது ‘ஒன்னோட நடந்தா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 இதில் தனுஷ் பாடல் பாடியபோது எடுத்த காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இப்பாடலை தனுஷுடன் சேர்ந்து பாடகி அனன்யா பட்டும் பாடி இருக்கிறார்.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல்பாகம் வருகிற மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement

Advertisement