• May 18 2024

அடடே அண்ணாச்சியை இப்படி கோமாளி ஆக்கிட்டாங்களே- கண்ணை கூசும் அளவுக்கு மேக்கப் போடுவீங்களாடா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட்.இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. மேலும் அண்ணாச்சிக்கு கொஞ்சம் கூட நடிப்பு வரவில்லை என்று கூறி வருகின்றனர். இப்படத்தில் இவருடைய முகத்திற்கு அதிகமாக மேக்கப்போட்டுள்ளதால் மேக்கப் மேனுக்கு அதிக சம்பளம் கொடுத்திருப்பார் என்று கூறப்படுகின்றது.

அளவுக்கு அதிகமான மேக்கப் அண்ணாச்சி முயற்சி செய்து காட்டிய எக்ஸ்பிரஷனை கூட மறைத்து விட்டது. மேலும் கண்ணை கூசும் அளவுக்கு போடப்பட்டுள்ள மேக்கப் அண்ணாச்சியை ஒரு ரோபோ போன்று காண்பித்து விட்டது.

அதனால் சென்டிமென்ட், ரொமான்ஸ் போன்ற எல்லா காட்சிகளிலும் அவர் ஒரே மாதிரி தான் முகத்தை வைத்திருக்கிறார். இதைத்தான் தற்போது பலரும் கிண்டலடித்து கொண்டிருக்கின்றனர். ஒரு ஹீரோவாக அவருக்கு இந்த சினிமாத்துறை ஒத்துவரவில்லை என்றாலும் தயாரிப்பாளராக அவர் தரமான படங்களை தயாரிக்கலாம்.

ஏனென்றால் பட்ஜெட்டை மீறி செலவானாலே கோபப்படும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் அண்ணாச்சி கோடிகளை கொட்டி படத்தை எடுத்துள்ளார்.அண்ணாச்சியின் இந்த மனதை தெரிந்து கொண்ட ஒரு கூட்டம் அவரை நன்றாகவே ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அவர் இந்த படத்தில் ஒரு கோமாளியாக காட்டப்பட்டு விட்டார் என்பது தான் உண்மை. இதற்குப் பிறகாவது அண்ணாச்சி இது போன்ற வீண் முயற்சியில் இறங்காமல் இருப்பது நல்லது. ஆனாலும் இந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட சினிமா தொழிலாளர்களை வாழ வைத்த அண்ணாச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement