• Sep 22 2023

ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து வெளியாகிய அபிஸியல் அப்டேட்- ஒரே நாளில் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


இயக்குநர் அட்லி இயக்கத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில்  நேற்று முதல் உலகமெங்கும் வெளியான திரைப்படம் தான் ஜவான்.இந்தியில் அட்லி இயக்கிய முதல் திரைப்படம் என்பதால், பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. 

இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து  விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.


ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால், ஜவான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று வெளியான ஜவானுக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியில் 75 கோடியும், தமிழில்  8 கோடியும், தெலுங்கில் 7 கோடியும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜவான் திரைப்படம் ஒரே நாளில் 100 கோடி வசூலை கடந்துள்ளது சினிமா கோலிவுட்டையும் பாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வார இறுதிக்குள் 500 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement