• Feb 22 2025

Bhavatharini -யின் இறுதிச் சடங்கு பற்றி வெளியான தகவல்! துடிதுடித்து நிற்கும் இளையராஜா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் மகளும் யுவன்சங்கர் ராஜாவின் அக்காவுமான பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம்  இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்தார்.

இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தனது மகளை காண இளையராஜா கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று சென்று இருந்தார்.


தனது தனித்துவமான குரலில் ரசிகர்கள் மனதில் தனக்கு என்று இடம் பிடித்தவர் பாடகி பவதாரணி . மலையாள திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமானவர் . "மஸ்தான மஸ்தான..'' என்ற முதல் பாடலிலேயே அவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உண்டானது .

தற்போது, பாடகி பவதாரணியின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் தமது  இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், பவதாரிணி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எங்கு வைக்கப்பட உள்ளது எங்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பவதாரிணியின் உடல் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணிக்கு, முருகேசன் தெரு தி நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும், மக்கள் கூட்டத்தை தவிர்க்க போலீஸ் ஏற்பாடு செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இதேவேளை, பவதாரிணியில் இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




  

Advertisement

Advertisement