• Jan 19 2025

இந்த ரவுடி கிட்ட எனக்கென்ன பேச்சு.. நான்சென்ஸ்! அசத்தும் கோமதி வியந்துபோன பாக்கியா! ராதிகா ஏதோ பிளான் பண்ணுறாங்க போல?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம்... அதில், மினிஸ்டர் அனுப்பிய ஆட்கள் பருப்புக் கறியை உப்பு போட்டு செய்து வைக்க, அவர்களை நீங்க ஒன்றுமே செய்ய வேண்டாம், நானே பாத்துக்கிறேன் நீங்க போங்க என சொல்லி, மீண்டும் பருப்புக்கறி செய்து வைக்கிறார்.


மறுபக்கம், கோமதி, மீனா, கதிர் ஆகியோர் ரூமில் இருந்து பேசிக் கொண்டு இருக்க, கோமதி தான் ஓடி வந்த கதையை சொல்லி சிரிக்கிறார்.


பாக்கியா சமையல் எல்லாவற்றையும் முடித்துவிட்டு இருக்க, அங்கு மினிஸ்டர் வந்து பாக்கியாவை பாராட்டுகிறார். கூட இருந்த பெண்களையும் பாராட்டி செல்கிறார்.


ராஜிக்கு மருதாணி வைத்துக் கொண்டு இருக்க, அங்கு ராதிகாவும், இனியாவும், அப்பத்தா எல்லாரும் இருந்து கதைத்து சிரிக்கின்றார்கள்.ராஜி மட்டும் ஏதோ யோசித்துக் கொண்டு இருக்க, ராதிகா அதனை நோட் பண்ணுகிறார்.


இன்னொரு பக்கம், கோபி வொர்க்கிக் போய்க் கொண்டு இருக்க, ராதிகா அவரை வீட்டுக்கு வருமாறு போன் பண்ண, அவரும் கதைத்துக் கொண்டு பாண்டியன் வீட்டுக்குள் போய் தகராறு பண்ணுகிறார். பாண்டியன் அவரிடம் இது உன் முத்து மாமா வீடு இல்லை என சொல்லி அனுப்புகிறார்.


கோமதி ஹோட்டலில் குளிக்க பக்கெட் இல்லை எடுத்து வைக்குமாறு சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு பாக்கியாவும் செல்வியும் வருகிறார்கள்.அவர்களிடம் பேசிய கோமதி, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என பாக்கியாவிடம் கேட்க, அவர் சமையல் பிரச்சனையை சொல்லுகிறார். அப்போது நான் சமைக்க வாரேன் என கோமதி சொல்ல, முதலில் பாக்கியா நீங்க கோவிலுக்கு வந்தனீங்க என்று சொல்லி மறுக்க, கோமதி இல்லை நானும் வருவேன் என சொல்லி செல்கிறார்.


பிறகு எழிலும் நிலாவும் விளையாடிக் கொண்டு இருக்க, அமிர்தாவையும் விளையாட அழைக்க, அவர் வர மறுக்கிறார். வெளியே போகலாம் என்று சொல்லவும், இல்லை என அமிர்தா சொல்ல, அங்கு மீனா வருகிறார். அவரிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார் அமிர்தா. அதற்கு மீனா, உங்க புருஷன் நல்லம் அவரை நல்லா பாத்து கொள்ளுங்க என அட்வைஸ் பண்ண, ஆமா அவரை விட்டு விலக மாட்டேன் என அமிர்தா சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.





Advertisement

Advertisement