• Apr 28 2024

விக்ரம் படத்திற்கு வாழ்த்து மழை பொழியும் அதே நேரம் இயக்குநர் நெல்சனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம்.

கோலிவுட் திரையுலக எதிர்பார்ப்பில் வெளியாகிய இத்திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். விக்ரம் படம் ரசிகர்களுக்கு பயங்கர ஆக்ஷன் விருந்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நெட்டிசன்கள் விக்ரம் படத்திற்கு வாழ்த்து மழையை பொழிந்து வரும் அதே சமயத்தில் இயக்குநர் நெல்சனை சம்மந்தமே இல்லாமல் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது லோகேஷ் இயக்கிய விக்ரம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தை ஏன் அப்படி எடுக்கவில்லை என விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள். அத்தோடு சம்மந்ததே இல்லாமல் எதற்கு நெல்சனை விமர்சித்து வருகின்றனர் என சிலர் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement