• Feb 01 2026

சரஸ்வதியை நைசாகப் பேசி அனுப்பி வைத்த நமச்சி, திடீரென வந்து நின்ற மேக்னா-குழப்பத்தில் தமிழ்- Thamizhum Saraswathiyum Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் வீட்டுக்கு மேக்னா வந்து உண்மை எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி நமச்சி காருக்குள் இருந்து கனவு காண்கின்றார். இருந்தாலும மேக்னாவை எப்படி தமிழ் வீட்டுக்கு போக விடாமல் தடுப்பது என யோசிச்சுக் கொண்டிருக்கின்றார்.


தொடர்ந்து மேக்னாவின் மாமா போன் பண்ணி மினிஸ்டர் உன்னை சந்திக்க வரச் சொல்லியிருக்காரு,நீ எப்போ ஊருக்கு வாற, சீக்கிரமாக நீ வந்தால் அவரை சந்திச்சிடலாம் என்று சொல்ல,மேக்னா தானும் மும்பைக்கு வருகின்றேன் என்கின்றார்.இதனால் நமச்சியை வீட்டுக்கு அனுப்பி வரமுடியாது என்று சொல்ல வைக்கின்றார்.

பின்னர் மினிஸ்டரிடம் போன் பண்ணி தான் சென்னையில் இருக்கிறேன் என்று மேக்னா சொன்னதால், அவர் அப்போ உங்க மாமாவை வந்து பார்க்கச் சொல்லுங்க என்று சொன்னதும் மேக்னா சந்தோசமடைந்து மாமாவை அனுப்பி விட்டு,தமிழுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வருவதைச் சொல்கின்றார்.


இதனால் எல்லோரும் சந்தோசப்பட, நமச்சி சரஸ்வதியை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகச் சொல்லி கட்டாயப்படுத்த வசு சரஸ்வதியைக் கூட்டிட்டு போகின்றார். தொடர்ந்து தமிழின் கல்யாணப் போட்டோ அங்கிருந்தால் பிரச்சினை என்பதை அறிந்த நமச்சி அதை எடுக்கும் போது கீழே போட்டு விடுகின்றார்.


அந்தப் போட்டோ கீழே விழுந்து கண்ணாடி உடைய, நமச்சி அதனை மெல்லமாக எடுத்து மறைத்து வைக்கின்றார். தொடர்ந்து வீட்டுக்கு வரும் மேக்னா தமிழ் வீட்டிலிருந்து எல்லோரிடமும் பேசிவிட்டு சாப்பிட்டு கிளம்ப ரெடியாகி நிற்கின்றார். நமச்சி சரஸ்வதி வந்திடுவாளோ என்ற பயத்தில் நிற்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement