• Sep 21 2023

மூர்த்தி எடுத்த திடீர் முடிவு... அதிர்ச்சியுடன் பார்க்கும் ஜீவா... பதறிப்போய் அண்ணன் போட்ட அதிரடிக் கண்டிஷன்.. 'Pandian Stores' Promo Video..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


அதில் மூர்த்தி எல்லாரோட ரூமிலும் ஏசி வாங்கி பூட்டி விடலாம் என முடிவு பண்ணி இருப்பதாக கூறுகின்றார், அதற்கு ஜீவா "அண்ணா சொன்னா கேட்டுக்கோங்க ரொம்ப செலவாகும்" என்கிறார். பதிலுக்கு மூர்த்தி "எல்லா விஷயத்திற்கும் கனக்குப் பார்த்திட்டு இருந்தால் முடியுமா, ஏய் காத்திரு இன்னைக்கே எல்லார் ரூமிலும் ஏசி வாங்கிப் பூட்டிடு" என்கிறார்.


பின்னர் கதிரும் ஏசி வாங்கி வருகின்றார். இதனைப் பார்த்த மீனா என் கண்ணையே என்னால நம்ப முடியலையே மாமா என்கிறார், பின்னர் எல்லார் ரூமிலும் ஏசி மாட்டப்படுகின்றது.


அந்தவகையில் ஏசி பூட்டிய ரூமில் தங்கியிருக்கும் ஜீவா மீனாவிடம் நல்லாயிருக்கு என்கிறார். இதனைத் தொடர்ந்து கதிர் சிறிது நேரம் கழித்து கரண்ட் பில்லினை மூர்த்தியிடம் கொண்டு சந்து காட்டுகின்றார். அதைப் பார்த்துப் பதறிப்போன மூர்த்தி "ஐயையோ 28 000 ரூபாய் வந்திருக்கு, இனிமேல் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் யாரும் ஏசி போடக் கூடாது எனக் கண்டிஷன் போடுகின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement