• Jan 19 2025

’எல்லா மயிரும் ஒண்ணுதான்! சினிமா மீது மிர்ச்சி சிவா கோபத்திற்கு என்ன காரணம்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் மிர்ச்சி சிவா தனது அடுத்த படத்தின் டேக்லைனாக ‘எல்லாம் மயிரும் ஒண்ணுதான்! என்று வைத்திருப்பது அவருடைய கோபத்தை காட்டுகிறதா என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரை உலகில் காமெடி ஹீரோவாக அறிமுகம் ஆகி பல வெற்றி படங்களை கொடுத்தவர் சிவா என்பதும் வெங்கட் பிரபு இயக்கிய ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவா அதன் பின் ’ சரோஜா’ ’தமிழ் படம்’ ’கலகலப்பு’ ’தில்லுமுல்லு’ ’வணக்கம் சென்னை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 இந்த நிலையில் தற்போது அவர் ’சுமோ’ ‘கோல்மால்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலையில் ’சலூன்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு திடீரென டேக் லைனாக ’எல்லாம் மயிரும் ஒண்ணுதான்! என்று வைத்திருப்பதாகவும் இந்த டேக்லைனை  மிர்ச்சி சிவா தான் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இது போன்ற வார்த்தைகள் திரைப்படங்களின் டைட்டில்கள் மற்றும் டேக்லைனில் பயன்படுத்துவதில்லை என்ற நிலையில் சினிமா மீது மிர்ச்சி சிவாவுக்கு அப்படி என்ன கோபம் என்று பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த படம் சலூன் கடையை பற்றியது என்பதால் அந்த டைட்டிலுக்கு சரியான டேக் லைனாக இது இருக்கும் என்று சிவா முடிவு செய்ததாகவும் மற்றபடி சினிமா மீது அவருக்கு எந்தவித கோபமும் இல்லை என்று அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது.


Advertisement

Advertisement