• May 18 2024

மெட்டி ஒலி நடிகை காயத்ரியின் அண்ணனும் ஒரு நடிகரா?- இதோ அந்த புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

90களில் மிகவும் தரமான நல்ல கதையுள்ள எதார்த்தமான சீரியல்கள் பல ஒளிபரப்பாகின. எனினும் அதுபோன்ற நல்ல கதைக்களத்தில் நடித்த பிரபலங்கள் முகம் இப்போதும் ரசிகர்களுக்கு மனதில் பதிந்திருக்கும்.

மேலும் அப்படி ஹிட்டான ஒரு தொடர் என்றால் அது மெட்டி ஒலி தான், கொரோனா  தொற்று காலத்தில் மறுஒளிபரப்பு ஆனது. அதில் சரோ என்ற வேடத்தில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனார் காயத்ரி, சூப்பர் ஹிட் ரோஜா சீரியலிலும் நடித்திருந்தார்.

அதேபோல் இவர் அஜித்திற்கு ஜோடியாக ராஜாவின் பார்வையிலே படத்திலும் நடித்திருப்பார்.



மேலும் இவர் இன்ஸ்டாவில் தனது அண்ணன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா உங்கள் அண்ணன் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இவர் ரஜினி கதை எழுதி, தயாரித்து சிறப்பு வேடத்தில் நடித்த வள்ளி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.அத்தோடு  பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா உள்ளிட்டோர் நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்திலும் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement