• Jan 19 2025

இந்த சிறுகுழந்தை யாரென தெரியுமா? தற்போது தளபதிக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பிரபலங்கள் பலரும் தற்போது தங்களது சிறுவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 

அந்த வகையில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகி, வைரலாகியுள்ளது. 

குறித்த நடிகை பெரும்பாலும் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் முதல் படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அதன்பிறகு விஜயுடன் நடித்த படம் வசூலில் சாதனை படைத்தது.


சினிமாத் துறையில், ஒரு மாடலாக தனது பயணத்தைத் தொடங்கிய இந்த நடிகை,'முகமூடி' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.

அவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது வெளியாகியுள்ள அவரின் சிறுவயது புகைப்படத்தில், கேமராவுக்கு போஸ் கொடுக்கும் போது வெள்ளை நிற ஆடை அணிந்துள்ளார்.எனினும் அவரை பலராலும் யூகிக்க முடியவில்லை.


அதேபோல் அவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றில், குட்டைப் பாவாடை அணிந்துள்ளார், மற்றொரு புகைப்படத்தில், பள்ளி சீருடையை அணிந்துள்ளார். 

மற்றொரு புகைப்படத்தில், பூஜா ஹெக்டேவின் சகோதரர் ரிஷப் ஒரு மல்யுத்த வீரரைப் போல போஸ் கொடுக்க, அவருக்கு அருகில் பூஜா ஹெக்டே புன்னகையுடன் இருப்பதைக் காணலாம்.


Advertisement

Advertisement