தமிழ் சினிமாவில் காதலும் கடந்து போகும், ஏலே, விக்ரம் வேதா, சில்லுக்கருப்பட்டி, காலா, ஜெய்பீம் உள்ள படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் மணிகண்டன்.
இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் படத்தில் நடித்திருந்தார். இது கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் இளைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

இதில் நாயகியாக நடித்த ஸ்ரீ கௌரி பிரியாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. மேலும், அதில் கண்ணா ரவி, நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன், பிந்து பாண்டு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen News!