தமிழ் சினிமாவின் மாஸ் கூட்டணிகளில் ஒன்றென்றால் அது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மாஸ்டர் பீஸ் காம்போவில் ரசிகர்களுக்கு பல ஹிட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். ஜிகர்தண்டா, பீட்சா, இறைவி மற்றும் மகான் போன்ற படங்களில் அவர்கள் சேர்ந்து வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
இப்போது, சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்திலும் இந்த சூப்பர் ஜோடி இணைந்துள்ளனர் என்ற தகவல் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் "மாஜிக் தொடரும்!" என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே வந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் மாஸான இசையமைப்பாளராக தான் காணப்படுகிறார். மேலும் சூர்யா 44 என்ற ப்ராஜெக்ட் மிகப்பெரிய புரட்சி என்பதால் அதிலும் இசை அதே அளவில் பிரமாண்டமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த கூட்டணியில் வரவிருக்கும் ரெட்ரோ படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இன்னும் அதிகரித்துள்ளது.
Listen News!