• Jan 18 2025

தமன்னா மீது காதல்! 20,25 நாட்கள் டேட்டிங்! அப்போ காதல் வரவில்லை! விஜய் வர்மா கூறிய உண்மை!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் நாயகி நடிகை தமன்னா தற்போது நடிகர் விஜய் வர்மா அவர்களை காதலித்து வருகிறார். இந்நிலையில் தமன்னா மீது காதல் வந்தது எப்பொழுது? என்பது தொடர்பாக முதல் முறையாக உண்மையை கூறியுள்ளார் விஜய் வர்மா.


பாலிவுட் படங்கள், இந்தி வெப் தொடர்களில் நடித்து வரும் விஜய் வர்மாவும், தமன்னாவும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். முதலில் காதலை உறுதி செய்யாத அவர்கள் அதன் பிறகு உறுதி செய்தார்கள். தற்போது இருவரும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகள், பாலிவுட் பார்ட்டிகள், உணவகங்களுக்கு செல்கிறார்கள். 


இந்நிலையில் தமன்னாவை காதலிப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் விஜய் வர்மா.லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி படத்தில் நடித்தபோது தான் விஜய் வர்மா, தமன்னா இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் நடித்தபோது காதல் வரவில்லை. அந்த ஷூட்டிங் முடிந்த பிறகே டேட் செய்யத் துவங்கினோம் என்றார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஷூட்டிங் முடிந்த பிறகு ஒரு ராப் அப் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வதாக பேசினார்கள். 


ஆனால் அது நடக்கவில்லை. எங்களுக்கு ராப் அப் பார்ட்டி வேண்டும். அதனால் நான், தமன்னா உள்பட 4 பேர் மட்டும் பார்ட்டிக்கு வந்தோம். உன்னுடன் அடிக்கடி நேரம் செலவிட விரும்புகிறேன் என தமன்னாவிடம் அன்று சொல்லத் தோன்றியது. ஆனால் 20 முதல் 25 நாட்கள் கழித்தே தமன்னாவிடம் பேசி டேட்டிங் சென்றோம் என்றார். சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுமாறு தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் வீட்டிலும் பிரஷர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். அதனால் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Advertisement

Advertisement