• May 15 2024

வசூலில் லாபத்தைக் கொடுக்காத 'பத்து தல'... தயாரிப்பாளருக்கு நஷ்டமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்திலும், சிம்பு நடிப்பிலும் உருவான 'பத்து தல' திரைப்படம் ஆனது சமீபத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.


அத்தோடு இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக, இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.


இந்நிலையில் இப்படம் வெளிவந்து தற்போது 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை வந்த வசூல் மூலம் தயாரிப்பாளருக்கு எந்தவொரு லாபமும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படம் வெளிவருவதற்கு முன் செய்யப்பட்ட ப்ரீ பிஸ்னஸில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement