• Feb 27 2025

'கிஸ்' படத்தின் ஷூட்டிங் சட்டென நிறைவா? ஓவர் ஸ்பீட்டில் கவின்.! டைரக்டர் ட்விட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின். தற்போது இவர் வெள்ளித் திரையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக காணப்படுகின்றார்.

கவின் நடிப்பில் முதலாவதாக வெளியான லிப்ட் திரைப்படம்   திரில்லர் நிறைந்த விறுவிறுப்பான கதை களத்தில் வெளியானது. அதை தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை அழகாக எடுத்துக்காட்டிய திரைப்படம் தான் டாடா. 

டாடா  படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு கவினின் கேரியரில் முக்கிய திருப்புமுனையாக காணப்பட்டது.

d_i_a"

அதன் பின்பு கவின் நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பெக்கர் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதிலும் பிளடி பெக்கர் திரைப்படம் நெல்சன் தயாரிப்பில் வெளியான போதும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


தற்போது பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தின் நாயகி ஆக நடித்த பிரீத்தி அஸ்ரானி இந்தப் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இதற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதாக தயாரிப்பாளர் அவருடையஎக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தை மார்ச் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே வேளை கவின் நடிக்கும் இந்த படத்திற்கு அதிகாரபூர்வமான பெயர் அறிவிக்கப்படாத நிலையில் 'கிஸ்' என பெயர் வைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement