• Oct 08 2024

லியோ படத்திற்கு இலங்கையில் தடையா? தீயாய் பரவும் கடிதம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

'லியோ' திரைப்படம் நாளை  உலகெங்கிலும் வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற முக்கிய படமாக விஜய்யின்  'லியோ' திரைப்படம் முன்னணியில் காணப்படுகிறது. 


இந்நிலையில், லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் ஹர்த்தாலன்று (20) தடுத்து நிறுத்த, தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று வெளியாகியுள்ளது.

எனினும், வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நாளை மறுதினம் (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க இருப்பதால், லியோ திரைப்படத்தினை வெளியிடக்கூடாதென தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கட்சித் தலைவர்கள்.., 'தாம் எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் யாருக்கும் அனுப்பவில்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.


மேலும், வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தும்  ரசிகர்களை குழப்பும் வகையில் போலியான கடிதங்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து நாளை மறுதினம் 20ம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை மேலும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement