• May 08 2024

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இதில் கமல்ஹாசன் உடன் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


 கடந்த மாதம் வரை சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை திருப்பதியை ஒட்டிய வனப்பகுதியில் நடத்தி வருகிறது.இதில் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரத்தின் இளம் வயது காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் தற்பொழுது இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகின்றது. இதனை இந்தியன் 2 படப்பிரபலங்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement