• Apr 28 2024

திருமணம் முடிந்தபின் முதன் முறை குக்வித்கோமாளி புகழ் வெளியிட்ட பதிவு..என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென  ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் புகழ்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், இந்நிகழ்ச்சிக்காக அந்த வாய்ப்பை புறக்கணித்துவிட்டார்  புகழ். அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. இதன்மூலம் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கிவிட்டன.

எனினும் தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார் புகழ். இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. மேலும் அதில் மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் புகழ்.

இந்நிலையில் பென்சியா என்கிற பெண்ணை காதலித்து  வந்த நிலையில் நேற்று அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.அதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இவ்வாறு இருக்கையில் திருமணம் நடந்து இரண்டாம் நாளான இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமணம் குறித்து முதன் முதலில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.அதில் எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்! என பதிவிட்டு்ளார்.



Advertisement

Advertisement

Advertisement