• Oct 16 2024

leo படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள kpy bala- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே....

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. படிப்பில் படு கெட்டி என்றாலும், சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தொலைக்காட்சியில் கால் பதித்தார். KPY நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்பில் தோன்றி பல ரசிகர்களை சிரிக்க வைத்தார் பாலா.

 இதை தொடர்ந்து,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று செய்த அட்ராசிட்டி கொஞ்சம் நஞ்சம் இல்லை. குக் வித் கோமாளி செட்டில் ஒருவரை பார்த்தாலே அவருக்கு காமெடியாக பெயர் வைப்பதிலும், டைமிங் காமெடி செய்வதிலும் வல்லவர்.


காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.


இந்த நிலையில் பாலா லியோ படத்தில் சின்ன காரெக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.இதனால் ரசிகர்கள் பலரும் பாலாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement