• Jan 19 2025

முத்தக்காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது.. பெரிய நடிகரின் படத்தை தட்டிக்கழித்த கீர்த்தி சுரேஷ்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் முத்த காட்சி மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியதை அடுத்து அவர் அந்த வாய்ப்பை தட்டி கழித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ‘இது என்ன மாயம்’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் ’நடிகையர் திலகம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ’சைரன்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ ’கன்னிவெடி’ ’பேபி ஜான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்


இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த படத்தில் லிப் லாக் மற்றும் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம். ஆனால் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்த கீர்த்தி சுரேஷ் அந்த படத்தில் தான் நடிக்க முடியாது என்று கூறி இருப்பதை தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஏனெனில் அந்த நடிகருடன் நடிக்க பல நடிகைகள் காத்திருப்பது மட்டுமின்றி கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது
 
பொதுவாக கீர்த்தி சுரேஷ் தன்னுடைய படங்களில் ஓவர் கிளாமர், முத்தக்காட்சி மற்றும் உடலுறவு காட்சிகளில் நடிக்க முடியாது என்று முதலிலேயே நிபந்தனை விதித்து விடுவாராம்.

Advertisement

Advertisement