• May 18 2024

கயல் சீரியல் நடிகை திடீர் மாற்றம்-அவருக்கு பதில் இவர் தானா..? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் சன் தொலைக்காட்சி, விஜய் டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களுக்குப் போட்டியாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஷயத்தில் சற்றே சறுக்கினாலும், சீரியல் விஷயத்தில் தன்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை சன் டி.வி. அவ்வப்போது நிரூபித்து வருகிறதை நாம் பார்க்கின்றோம்.

அவ்வாறு இருக்கையில் கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங் டாப் 5 இடங்களை தொடர்ந்து பிடித்து கெத்து காட்டி வருகிறது.

மேலும் கயல் என்ற பெண் அப்பா இல்லாத தனது குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறாள், அதனை அழிக்க அவரது பெரியப்பாவின் குடும்பத்தினரும், அவள் மீது கொண்ட ஆசையால் கயல் வேலை பார்க்கும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் என்னென்ன சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள் என்பதை அதிரடி திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புடன் ஒளிபரப்பி வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.

இந்நிலையில் எழிலரசனின் தாயாராக நடிக்கும் பிரபல நடிகை காயத்ரி ராமன் விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.அவருக்குப் பதிலாக மற்றுமொரு நடிகை நடிக்க கமிறங்கியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement