• Apr 28 2024

யார்டா நீ..? வெளியானது கார்த்தியின் 'ஜப்பான்' பட intro டீசர்... அனல் பறக்கும் மாஸ் வீடியோ இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தியின் நடிக்கும் 25-ஆவது திரைப்படத்தை 'குக்கூ, ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' பட நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். 


இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அத்தோடு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்வதோடு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 


இந்த படத்தின் புதிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி, ஜப்பான் படத்தின் intro டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement