• Apr 27 2024

சந்திரமுகி படக்குழுவினருக்கு பாஃய் சொல்லி கிளம்பிய கங்கனா ரனாவத்- கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, கே.ஆர்.விஜயா, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் சந்திரமுகி.

 இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. தமிழில் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு தான் இரண்டாவது பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார்.இதில் வடிவேலு, ராகவா லாரன்ஸ், ராதிகா, கங்கனா ரனாவத் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதும் உண்டு. அந்த வகையில் தற்பொழுது கங்கனா ரனாவத் தன்னுடைய பட்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

இதனை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளர்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement