• May 18 2024

தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை- வெளிப்படையாகப் பேசிய கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில்  சித்தி இட்னானி, காயாடு லோகர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முதல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்தவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள் அது எனக்கு மிகப்பிடிக்கும், அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ அது போல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம்தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ்ப்படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ்ப்படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு 2 பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி வாய்ப்புகளை நான் தவறவிடுவதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement