• May 18 2024

வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய காஜல் அகர்வால்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். 10 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்த காஜல் மெல்ல மெல்ல தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.


தனுஷ், விஜய், அஜித் என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு காஜல் திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.


இதனை அடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் புதிய வீட்டின் கிரகப் பிரவேச பூஜையில் தனது குடும்பத்துடன்இணைந்து பங்குபற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம். 





Advertisement

Advertisement