• Feb 14 2026

எல்லா ஆம்பளைங்களுக்கும் வாழ்க்கையில ரெண்டு தேவதைங்க கிடைப்பாங்க: ‘சைரன்’ டிரைலர்

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த டிரைலர் ஆரம்பத்திலேயே ’டாக்டர்கள் எல்லோரும் சொல்வது ஒன்றுதான், ஐந்து நிமிடம் முன்னாடி கொண்டு வந்திருந்தால் நோயாளியை காப்பாத்தி இருக்கலாம், அந்த ஐந்து நிமிடம் நம் கையில் தான் உள்ளது’ என்ற வசனத்துடன் டிரைலர் ஆரம்பமாகிறது.

எல்லாம் ஆம்பளைங்களுக்கும் அவங்க வாழ்க்கையில ரெண்டு தேவதை கிடைப்பாங்க, ஒண்ணு நமக்காகவே பிறந்த தேவதை, இன்னொன்னு நமக்கு பிறந்த தேவதை, அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒண்ணுன்னா, நம்மளால தாங்க முடியாது என்று மனைவி மற்றும் மகள் குறித்து ஜெயம் ரவி உருக்கமாக பேசும் வசனம் நெகிழ வைக்கிறது.



தனது மனைவி மற்றும் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை ஜெயம் ரவி வித்தியாசமாக கொலை செய்வது, அதை காவல்துறை அதிகாரியான கீர்த்தி சுரேஷ் கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement