• Sep 30 2023

வெளியாகி ஒரே நாளில்... கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்ற 'ஜெயிலர்' பட ட்ரெய்லர்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 


அந்தவகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில் நேற்றைய தினம் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. 2.15 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் ஆரம்பம் முதலே ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்து பட்டையைக் கிளப்பியிருக்கின்றது. 


இதில் ரிட்டையர்டு லைஃப், அழகான குடும்பம் என வாழ்ந்துவரும் ரஜினி, திடீரென வில்லன்களை புலியாக பாய்ந்து வெளுத்து வாங்குகிறார். ரஜினியின் அக்மார்க் ஆக்‌ஷன் காட்சிகள் ஜெயிலரிலும் இடம்பெற்றுள்ளது என்பதை ட்ரெய்லரின் மூலம் தெளிவாக காண முடிகிறது.

இவ்வாறாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் வெளியான இந்த ட்ரெய்லர் ஆனது வெளியாகி 19 மணி நேரத்திலேயே 1 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement