T. J. ஞானவேல் எழுதி இயக்கி சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து 2021 ஆம் ஆண்டு ott தளத்தில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் அமேசன் தளத்தில் 164 நிமிடங்கள் ஓடி வெற்றியடைந்தது. கொரோனா சீசனில் ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கவில்லை என வருத்தமடைந்த படங்களில் இதுவும் ஒன்று
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2d entertainment இந்த படத்தினை தயாரித்திருந்தது. ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையில் இடம்பெற்ற தடைகளை மையமாக வைத்து இந்த கதை அமைந்திருந்தமையினால் ஒரு சில தடைகள் ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி படம் அசுர வெற்றியடைந்தது.
இந்த நிலையில் தற்போது இப் படத்தின் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் நேர்காணல் ஒன்றின்போது "ஜெய் பீம்' படத்துல சூர்யா சார் ஆக்டிங்கை விட என்னுடைய ஆக்டிங் நல்லா இருக்குன்னு ஜோதிகா மேம் சொன்னாங்க. அதை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் நான் அதை அக்செப்ட் பண்ணிக்கல. அதைவிட ஜெய் பீம் ரிவியூ பார்த்தவுடனே மேம் என்கிட்ட வந்து ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்கன்னு பர்சனலா சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் சூர்யா சாரை விட நல்லா நடிச்சு இருக்கீங்கன்னு சொன்னது ஏத்துக்க முடியல கஷ்டமா இருந்தது. " என கூறியுள்ளார்.
Listen News!